கந்தகம் உமிழும் காடு

கந்தகம் உமிழும் காடு
கடைசிக்கிளையில் வீடு
மூடப்பட்ட கதவுகளோடு
தனிமையில் உறங்குது கூடு

காலை மாலை புரியாமல்
காடது எரிவதும் தெரியாமல்
பாடிக்கிடக்குதப்பறவை
கனல் கூட்டின் நிழல் தொடும்வரை

காடே எரியுது கூடுகள் கரையுது
இன்னும் முடியாப் பாடல்
காடுறை மரங்களில் கிளைகளிலெல்லாம்
மூடிய கதவுகள் பின்னால்
மீண்டும் ஒலித்திடும் பாடல்
அது என்றும் முடியாப்பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *