மாயா…
இயற்பெயர் மலர்விழி பாஸ்கரன் (1983). மதுரையில் பிறந்து சென்னை சீனா மலேசியா என்று சுற்றிவிட்டு தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கதைகளைக் காதலிப்பவர். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம். இது வரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் ’கடாரம்’ என்ற வரலாற்றுப்புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வாலாற்று பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார். தென்கிழக்காசிய வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
எழுத்தின் எல்லைகோட்டுக்குள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்துவிடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர். கவிதைகளிலும் நாட்டமுண்டு.

படைப்புகள்

அறிவியல் புனைவுப் படைப்புகள்:
- அன்றுவந்ததும் இதே நிலா – நாவல், 10.10.2010. (காலம் = 3, நாவல் (அன்று வந்ததும் இதே நிலா, மறுபதிப்பு), 2025, ஹெர் ஸ்டோரீஸ்)
- The children – 2011, Indus Ladies (original english version of Unit 109)
- யூனிட்109 – நாவல், 2019 (The children – tamil version) – அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டி, எழுத்துப் பிரசுரம்
- குவாண்டம் கொலைகள் – குறுநாவல், 2020, அமேசான் கிண்டில்
- ஈறிலி – 2020, போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை, அரூ
- அழிபசி – 2020, சிறுகதை, அரூ
- தூமை – 2021, சிறுகதை, அரூ
- மஞ்சள் சுவர்த்தாள் – மொழிபெயர்ப்புச் சிறுகதை, 2021, கனலி
- சூரிய ஒளியில் டெய்ஸி – அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு, 2022, கனலி.
- டைனோசர் – பரிசு பெற்றச் சிறுகதை, 2023, அரூ
- ஹிதேரா – நாவல், 2024, ஹெர் ஸ்டோரிஸ்
- காலம் = -1, நாவல் (அன்று வந்ததும் இதே நிலா 2), 2025, ஹெர் ஸ்டோரீஸ்
வரலாற்றுப் புனைவுப் படைப்புகள்:
- கடாரம் – 2012, நாவல், வானதி பதிப்பகம்
- நாகர்நிலச் சுவடுகள் – வரலாற்றுப் பயணநூல், தமிழ் மரபு அறக்கட்டளை
- செம்பா – 2022, விகடன்.காம், வானதி பதிப்பகம்
- பல்லவ காம்போஜம் 24, வானதி பதிப்பகம்
மொழிபெயர்ப்பு நாவல்:
- கறுப்பு விளக்குத் தெரு – 2022, ஜீரோ டிகிரி பதிப்பகம்
பிற படைப்புகள்:
- இளா – த்ரில்லர் நாவல், அமேசான் கிண்டில்
- இரத்த நிலா – க்ரைம் த்ரில்லர், அமேசான் கிண்டில்
- நம்பர்கை – சமூக த்ரில்லர் நாவல், அமேசான் கிண்டில்
- வைகறை தேடும் வெண்ணிலவு – ரொமான்ஸ் நாவல், அமேசான் கிண்டில்
- சாம்பல் தேவதைகள் – க்ரைம் த்ரில்லர், அமேசான் கிண்டில்
