யூனிட் 109 | Unit 109
When a gifted boy named Ish goes missing, his mother’s search uncovers a secret world of scientific experimentation, one that may be operating closer to reality than anyone suspects.
Unit 109 (யூனிட் 109) is a Tamil science fiction thriller by Maya, published by Zero Degree Publishing (எழுத்து பிரசுரம்).
இது உங்களைச்சுற்றி நடக்கும் கதை தான்.
ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.
சொல்லப்போனால் இது கதையே அல்ல, முழு நிஜம்.
அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்?
யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம் அப்போது நம்பினாலும் நம்புவீர்கள்.
அதுவரை பத்திரமாகவே இருங்கள்.
-பெக்கா.
கதை பிறந்த கதை:
முதல் அறிபுனை நாவலான அன்றுவந்ததும் இதே நிலா வெளிவந்து சிலகாலம் எழுதும் உத்வேகமே இருக்கவில்லை. பின்னர் பணிநிமித்தம் நாடு மாறிய நிலையில் வலசை வந்தவர்களுக்கென்றே இருந்த இணையதளமொன்றில் இணைந்திருந்தேன். அங்கே இருந்த கதைப்பகுதி என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. சிற்சில கதைகள் எழுதியபின் 2011 காலகட்டத்தில் ஒரு புதிய அறிவியல் புனைவு எழுதும் வேகத்தில் ஆங்கிலத்தில் எழுதத் துவங்கியது தான் The children தொடர்கதை. genetic engineering, remote viewing, human farming போன்ற கருத்துகளில் தமிழில் அதிகம் கதைகள் வந்திராத காலம் அது. மெல்ல இத்தொடருக்கு இண்டஸ்லேடீஸ் தளத்தில் ஆதரவு பெருகியது. தொடராக வெளிவந்து முடிவடைந்த நிலையில் சிறந்த தொடர் என்கிற பரிசும் பெற்றது.
பின்னாளில் அதைத் தமிழில் எழுதியபின் சரியான வாய்ப்பு நோக்கிக் காத்திருந்தேன். 2019இல் அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டி வந்ததும் யூனிட்109 என்ற பெயரில் களமிறங்கியது இக்கதை. அப்போது வாசகரிடையே பெரும் ஆதரவையும் பெற்றது. Tamil Science Fiction உலகில் எனக்கு ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது இந்நூல்.
இது எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் ஜெனடிக் எஞ்சினியரிங், ஆக்மெண்டட் ஆர்கன்ஸ், ஹ்யூமன் ஃபார்மிங், ரிமோட் சியிங் போன்ற கருத்தாக்கங்கள் வெகுகுறைவாகவே எழுதப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வகையில் ஒரு புதிய பரிமாணத்தைத் தமிழ் வாசகர்களுக்கு எடுத்துச்சென்ற பெருமை இக்கதைக்கு உண்டு.
buy now
நூலைப் பெற
பிற அறிவியல் புனைவு நூல்கள்


