குவாண்டம் கொலைகள்
Quantum Kolaigal is a Tamil science fiction novella written by author Maya. The story explores parallel universes through the lives of two women who face the same dilemma but make different choices. As their realities begin to intersect, the consequences ripple across worlds, creating a tense narrative about fate, choice, and the fragile balance of alternate timelines.
சில கனவுகள்
ஒரு வாழ்க்கைக்கு எத்தனை மாற்றுகள்.
ஸ்கால்பெல்களுக்கும் சூச்சர்களுக்கும் மத்தியில் மெல்லிதாய் பூக்கும் கனவுகளுக்கு விடை தெரியாமல் அருள்மொழி தவிக்கின்ற நேரத்தில் நிகழும் தொடர்கொலைகள்.
கொலைகளைக் குறுக்குவெட்டாய்ப் பிரித்துச் சொல்ல முடிபவனால் அவனைத்தேடி அவரும் அவள்குறித்த எதற்கும் பதிலில்லை.
தன்னாலேயே புரிந்து ஏற்றுக்கொள்ள முடியாத எதைக் கருணாவுக்கும் சத்யாவுக்கும் அவன் விளக்கிவிட முடியும்?
சில சமயம் உண்மை வினோதமானதாய், ஏற்றுக்கொள்ள முடியாததாய் இதுவரையிலான அறிவியல் நம்பிக்கைகளைக் குப்புறக்கவிழ்த்துவதாய் இருக்கக்கூடும்.
ஏனென்றால் நீ உற்று நோக்காவிடில் உண்மை என்ற ஒன்றே இல்லை. இந்த வாழ்க்கையே ஒரு குவாண்டம் செயல்பாடு தான்.
அறிவியல் புனைவில் Parallel Universe என்ற இணையுலகங்கள் பற்றிக்கதைகள் வந்து தசாப்தங்கள் ஆகிவிட்டன.
ஆனால் தமிழில் பெரிதாக எதுவும் எழுதப்படவில்லை. இரண்டாம் உலகம் திரைப்படம் ஓரளவுக்கு அந்தக்குறையைச் சரி செய்தது. Multiverse theory மிக நுணுக்கமான படிநிலைகள் கொண்ட ஒரு கோட்பாடு.
அப்படியொன்றை எளிமையாக எடுத்தாண்டு ஒரு கதைசொல்லும் ஆசையில் விளைந்தது தான் குவாண்டம் கொலைகள். ஒன்றை ஒன்று உரசிக்கொள்ளும் இரு இணை உலகங்களின் வழியே இடம்மாறும் பெண்களும் அவர்கள் எடுக்கும் முடிவுகளால் அவர்களின் வாழ்வே எப்படி முற்றிலும் மாறுகிறது என்றும் விரிந்து செல்கிறது கதை.
buy now



