a Tamil Time-Travel Fiction Duology

அன்று வந்ததும் இதே நிலா (காலம் சீரிஸ்)

2010இல் நான் எழுதிய முதல் நாவல் அன்று வந்ததும் இதே நிலா என்ற பெயரில் வெளியானது.

அறிவியல் புனைவில் பெரிதாக நாவல்கள் வந்திராத காலமது. அப்போது வெளியானபோதும் விநியோகச் சிக்கல்கள் மற்றும் வேறுசிலச் சிக்கல்களால் பேரளவில் வாசகர்களைச் சென்றடையாமலே போனது. நெடுங்காலம் கழித்து பல்வேறு நூல்கள் எழுதியபின்னர் இதை மறுபதிப்புச் செய்யலாமென்கிற எண்ணம் எழவே அத்தோடு இன்னொரு பாகமும் எழுதினால் நன்றாயிருக்குமென்று தோன்றவே உருவானது தான் இந்த இரட்டைப் புதினம்.

காலம்=3 மற்றும் காலம்=-1 என்று பெயரிலேயே இரு நூல்களின் கதைக்களங்களை ஒருவாறு அனுமானித்துவிடலாம்.

நமக்குத் தொடர்பற்ற வெவ்வேறு காலகட்டங்களில் மாட்டிக்கொள்ளும்பொழுது நிகழும் சிக்கல்களை நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து எழுதப்பட்ட கதை. முதல் நூலில் காலப்பயணம் (time travel)குறித்து எளிமையான விளக்கத்தைக் கையாண்டபின் விறுவிறுப்பும் சாகசமும் முன்வைத்து எழுதப்பட்ட soft scifi வகைமையிலான ஜாலியான கதை.

சமகாலத்தில் தமிழில் டைம் ட்ராவலை முன்வைத்து எழுதப்பட்ட முதல் முழுநீள இரட்டைப் புதினம்.

Kaalam = 3 – Tamil Time Travel Novel

காலம் = 3

மூன்று வேறு காலங்களிலிருந்து மூவர்
ஒரே இரவில் சந்திக்கும் போது என்ன நடக்கும்?
அன்று வந்ததும் இதே நிலா இரட்டைப் புதினத்தின் முதல் பாகம் இந்த காலம் = 3.

அச்சுப் பதிப்பு கிண்டில் பதிப்பு

Kaalam = -1, Tamil Time Travel Novel

காலம் = -1

காலப்பயணத்தின் மர்மம் தொடர்கிறது.
எதிர்காலத்தை நோக்கி நகர்ந்த பயணத்தைத் தொடர்ந்து வரலாற்றுக்காலம் நோக்கிப் புரவியில் பயணிக்க வைக்கிறது. காலம்=-1 அன்று வந்ததும் இதே நிலா இரட்டைப்புதினத்தின் இரண்டாவது நூலாகும்.

அச்சுப் பதிப்பு

பிற அறிவியல் புனைவு நூல்கள்

குவாண்டம் கொலைகள்
Cover page of Quantum Kolaigal
மேலும் பார்க்க
ஹிதேரா
Cover page of Hithera novel
மேலும் பார்க்க