ஹிதேரா
Hithera is a Tamil dystopian science fiction novel written by author Maya. Set in a dark future where truth is obscured and power is carefully controlled, the novel explores a society shaped by fear, division, and hidden systems. Blending suspense with speculative imagination, Hithera unfolds as a tense story of control, rebellion, and buried truths.
வாழ்வின் பெரும் நம்பிக்கைகள் பொய்த்துப்போகின்ற காலத்தில் மனித இனத்துக்கு உதவக்கூடியது எது?
உண்மையான ஆற்றல் யாரிடம் இருக்கிறது? இயக்குவது யார்? இயக்கப்படுவது யார்? மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை எது?
பக்கங்களைப் புரட்டப்புரட்ட உங்களுக்குள்ளும் பல கேள்விகள் எழக்கூடும். மிரட்டும் பதில்களைப் பெரும்பாலும் உங்கள் உள்மனது அறிந்திருக்கக்கூடும்.
மகத்தான மனித இனத்தின் ஆகச்சிறந்த வலிமைகளுக்கும் அதிமுக்கியமான பலவீனங்களுக்கும் இடையிலான போராட்டமே இக்கதை!
புதிய முயற்சிகளைச் செய்து பார்ப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதிலும் அறிவியல் புனைவில் அப்படியான முயற்சிகள் அதிக நேரத்தையும் உழைப்பையும் கோரும். மேலும் அறிவியல் புனைவைப் பொறுத்தவரை காலம் ஒரு சிக்கல்.
எல்லோரும் அசிமோவையும் ஊர்சுலாவையும் போல டைம்லெஸ் கதைகள் எழுதிவிட முடியாது. காலமும் சொல்லும் பொருளும் முக்கியம்.
யூனிட் 109 வலைப்பக்கத்தில் எழுதிய காலத்துக்கும் அது பதிப்பான காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வந்த பல திரைப்படங்களைப் போல அந்தக்கதை இருப்பதாகப் பின்னாட்களில் கருத்துகள் வந்தபோது என்னால் ஏதும் செய்ய இயலவில்லை.
இந்த ஹிதேராவும் கூட எழுதத்துவங்கி பதிப்பிக்க மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது தான் இது பேசும் கருப்பொருளான AI, AGI, போன்ற விசயங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. இருப்பினும் ஒரு சமூகமாகச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் ஒரு பிறழுலகில் நடக்கும் கதையாகப் புதிய பரிமாணத்தில் பார்ப்பது தமிழில் புதிது என்றே நினைக்கிறேன்.



