கறுப்பு விளக்குத் தெரு
Karuppu Vilakku Theru is the Tamil translation of Chika Unigwe’s acclaimed novel The Black Sisters’ Street. The story follows the lives of four African women who arrive in Europe with dreams of a better future but find themselves trapped in harsh realities. Through their intertwined stories, the novel reveals themes of migration, survival, friendship, and resilience.
ஆப்பிரிக்காவின் வெவ்வேறு இடங்களிலிருந்து பெல்ஜியம் ஆண்ட்வெர்ப்பின் சிவப்பு விளக்குப் பகுதியைச் சென்ரடைகின்றனர் நான்கு பெண்கள். ஐரோப்பாவில் நன்றாகச் சம்பாதிக்கலாம் என்ற கனவுடன் வந்த அவர்களில் ஒருத்தியான சிஸி கொலைசெய்யப்படுகிறாள். இந்தச்செய்தி அந்த மெல்லிய மனங்களைச் சுக்குநூறாக்குகிறது. போரினால் வாழ்வில் பெரும் துன்பத்தைச் சந்தித்த பேரழை ஜாய்ஸ், கடந்தகாலத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைக்க எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளும் அமா, தனிப்பட்ட காரணத்தால் தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பாடுபடும் எஃபே என்று இவர்கள் மூவரும் இத்துன்ப நிகழ்வினால் ஒன்றிணைந்து தத்தம் கதைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அக்கதைகள் அச்சத்தின்…காதலின்…புலம்பெயதர்லின் கதைகள். அவையாவும் டெலே என்ற கபடதாரியைப் பற்றிய கதைகள்.
கதை பிறந்த கதை:
2020இல் ஜீரோ டிகிரியின் எழுத்துப் பிரசுர வெளீடாக யூனிட் 109 நூல் வந்தது. அதன் பிறகு சார்லட் பெர்கின்ஸின் மஞ்சள் சுவர்த்தாள் சிறுகதையைப் போல எனக்குப் பிடித்த அறிபுனைச் சிறுகதைகளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு ஒரு சுவாரஸ்யமான சவாலாகத் தோன்றியது. நான் எழுதுகின்ற வகைமையில் இல்லாத ஒரு முழு நீள நாவலை மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணம் கொண்டேன்.
ஜீரோ டிகிரி வாயிலாகப் புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சிகா உனிக்வே(Chika Unigwe) அவர்களின் On black sisters street புதினத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது.
மிக அழுத்தமான கதைக்கருவைக்கொண்டிருந்த இந்த நாவல் ஒரு சவாலாக இருந்தது. பேரளவில் நைஜீரியாவின் யொரூபா மற்றும் ஈக்போ மொழிச் சொல்லாடல்களும் சொலவடைகளும் கொண்டிருந்ததால் மொழிபெயர்ப்பது சவாலாகவும் சுவைமிகுந்ததாகவுமே இருந்தது.
buy now
நூலைப் பெற
பிற நூல்கள்



