a tamil science fiction

இரத்த நிலா

நண்பனின் திருமணத்தைச்சாக்கிட்டு கிராமத்து விருந்தும் பரபரப்பற்ற விடுமுறையும் எதிர்பார்த்து வரும் பட்டணத்து ஐ.டி இளைஞன் கதிரவனின் கைகளில் அங்கு நடந்த தொடர்கொலைகளைத் துப்பறியும் பணி திணிக்கப்படுகிறது.
அவனை ஆட்டி வைக்கும் மீனாட்சிகாக அவனும் துரிதகதித் துப்பறிவாளனாகிறான்.
ஈசானிக்கோவில் மர்மங்களின் முடிச்சுகள் மெல்ல அவிழ்கையில் அவர்களைச்சுற்றிலும் மாயச்சுவரொன்றும் எழும்புகிறது. அது மலைக்கரட்டின் மீதேறும் ரத்தநிலவில் முடிவடைகிறது.
இருவரும் சுவர் தகர்த்து மீண்டார்களா இல்லையா?

2010இல் இணையதளத்தில் தொடராக வெளிவந்து வாசகரிடையே பேராதரவைப்பெற்ற க்ரைம் த்ரில்லர்.
இப்போது அமேசானில்…

2012 Indusladies இணையதளத்தில் தீவிரமாகச் சாகசக்கதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம். அப்போது யூனிட்109ஐத் தொடர்ந்து இளா என்கிற த்ரில்லர் எழுதியபின் க்ரைம் த்ரில்லர் எழுதச்சொல்லி வாசகியர் விருப்பம் தெரிவிக்கவே, அப்படி எழுதிய ஒரு க்ரைம் த்ரில்லர் தான் இந்த இரத்தநிலா.

ஒரு எளிமையான கிராமத்தில் சக்திவாய்ந்த தெய்வமென்று நம்பப்படும் ஒரு சாமியின் பெயரால் நடக்கும் தொடர்கொலைகளுக்கு விடை தேடுவது தான் இந்தக்கதை.

வாரத்தொடராக இது indusladies இணையதளத்தி வெளிவந்தபோது பெரும் வரவேற்பை பெற்றதோடல்லாமல் எனக்கு வாசகியரிடம் ’க்ரைம் குயின்’ என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

பிற த்ரில்லர் நூல்கள்

நம்பர்கை
Cover page of numberkai novel
சாம்பல் தேவதைகள்
Cover page of sambal devathaigal