a social thriller

நம்பர்கை

வாழ்வின் பெரும் நம்பிக்கைகள் பொய்த்துப்போகின்ற காலத்தில் மனித இனத்துக்கு உதவக்கூடியது எது?
உண்மையான ஆற்றல் யாரிடம் இருக்கிறது? இயக்குவது யார்? இயக்கப்படுவது யார்? மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை எது?
பக்கங்களைப் புரட்டப்புரட்ட உங்களுக்குள்ளும் பல கேள்விகள் எழக்கூடும். மிரட்டும் பதில்களைப் பெரும்பாலும் உங்கள் பதினேழு வயது திலீபனுக்குப் பள்ளிக் கல்வியின் பாடங்களைவிட, களவிலும் அதன் நுணுக்கங்கள் மேலும் விருப்பம் அதிகரிக்கிறது. அதைத் தடுத்து, அவனை நல்வழிப்படுத்த ஆளில்லை. தவறான வழிகாட்டுதலால் கூட்டாளிகளோடு சேர்ந்து தீய செயல்களில் ஈடுபடுகிறான். இந்த வேளையில் நேர்கிறது ஒரு வினோதமான கொலை. அது அவன் வாழ்வையே புரட்டிப் போடுகிறது.
அது தொடர்ந்து அவனது வாழ்க்கைப் பயணத்தில் அபாயத்தின் விளம்புகளை அதிகப் படுத்துகிறது. மெல்ல அவனை மட்டுமின்றி அவன் தொடர்பான அனைவரையும் ஒரு மாயை சூழத் துவங்குகிறது. திலீபன் சிறையெடுக்கப்படுகிறான் ஒரு கொடூரனாய் உலகுக்கு அடையாளம் காட்டுகின்றன.
திலீபனுக்கு உதவும் எண்ணத்தில் வருகிறாள் சத்யா.
வழிகாண முடியாத சுழிக்குள் இழுபட்டவனாய் தவிக்கும் திலீபனின் வாழ்க்கை இனி என்ன ஆகும்?
உண்மைகளை அறிந்து கொண்ட சத்யாவின் நிலை என்ன?
பலரின் வாழ்க்கையை புள்ளிகளாக்கி அவற்றைச் சுற்றிக்கோலமிட்டு விளையாடும் விபரீத மனிதனின் முகமூடியைக் கிழிப்பது யார்?

கடாரம் வெளியானபின் மலேசியாவில் எழுதுவதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தபோது அப்போது மலேசிய மக்களிடையே நல்லாதரவு பெற்று நடந்து வந்த இதழ்களுள் ஒன்றான நம்நாடு இதழின் வித்யாசாகர் அவர்கள் தான் உதவிக்கு வந்தார். 2013இல் நம் நாடு பத்திரிக்கையின் மாத இதழிலும் ஞாயிறு இதழிலுமாக இரு தொடர்கள் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஞாயிறு செய்தித்தாளில் வந்த தொடர் தான் இது. அப்போது கரைதேடும் நிலவுகள் என்ற பெயரில் தொடராக வந்தது.

மலேசிய நம்நாடு பத்திரிக்கையில் வெளிவந்த கரை தேடும் நிலவுகள் தொடர்கதை

அன்றைக்கு மலேசியாவை அச்சுருத்திய நம்பர்கை என்று சொல்லப்பட்ட கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவலாக இருந்தது. பின்னாளில் கபாலி திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகளின் பின்னனியில் ஒரு தலைமுறையே போதைக்கும் வன்முறைக்கும் பலியாகிக் கொண்டிருந்தது. அதை நேரடியாகக் காணும் வாய்ப்புகள் எனக்கு அமைந்தன. அதை மையமாக வைத்து அன்று எழுதப்பட்ட விறுவிறுப்பான கதை தான் நம்பர்கை.

அப்போது மலேசிய வாசகர்களின் ஆதரவு வாசகச் செய்திகளின் மூலம் தெரிந்தது. இன்று அதுவே அமேசான் கிண்டிலில் நம்பர்கை என்ற பெயரில் வாசிக்கக்கிடைக்கிறது.

ஒவ்வொரு கேங்(gang) தத்தம் குழுவுக்கென ஒரு நம்பரை தங்கள் கைகளில் பச்சைகுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்தது. அதை வைத்தே அவர்களை அடையாளங்காணும் பொருட்டு அப்படிச் செய்தனர். அதையே பெயராக்கொண்டு நாவலாக உருவாறியது.

பிற த்ரில்லர் நூல்கள்

இரத்த நிலா
Cover page of Ratha nila novel
நம்பர்கை
Cover page of numberkai novel
சாம்பல் தேவதைகள்
Cover page of sambal devathaigal